பாகிஸ்தான் காபந்து பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் தேர்வு! இதை யாருமே எதிர்பார்க்கல! யார் இவர்??
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் காபந்து அரசை வழிநடத்தப் பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. அங்கு இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக வந்த நிலையில், அங்குப் பொருளாதார சூழல் மிக மோசமாக இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க அந்நாட்டில் 2022 வரை பிரதமராக இருந்த இம்ரான் கானும் சிறையில் அடைக்கப்பட்டார். தோஷகானா வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான்: அவர் தான் பாகிஸ்தான் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதாவது அங்கு இப்போது அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஒரு பக்கம் அவரது வழக்கறிஞர்கள் இறங்கியுள்ளனர்.
கலைப்பு: இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்நாட்டின் சட்டப்படி அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதுவரை காபந்து அரசு பதவியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இம்ரான் சிறையில் இருக்கும் நிலையில், தேர்தலை நடத்தி முடிக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

.jpeg)

Comments
Post a Comment